மைத்திரியுடன் நிபந்தைனையுடனான பேச்சுக்கு மஹிந்த தயார்

மைத்திரி மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், நிபந்தனையுடனான பேச்சுக்களை நடத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகி வருகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

ஏனையவர்களுடன் பேச மஹிந்த ராஜபக்ஷ தயாராக இல்லை. மைத்திரிபால சிறிசேனவுடன் மாத்திரம், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிபந்தனைகளை அவர் ஏற்றுக் கொண்டால், பேச்சுக்களை நடத்த தயாராக இருக்கிறார் என மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்றும், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கோரி வருகின்றது.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சில உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.