மைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன

நேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான இந்த சந்திப்பிலேயே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி சுதந்திர மக்கள் முன்னணி (நிதஹாஸ் பொதுஜன பெரமுன) என்ற பெயரில் தேர்தலை சந்திக்கலாமென இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மைத்திரி- மஹிந்த சந்திப்பு குறித்த தகவல்கள் நேற்று காலையிலேயே வெளியாகியிருந்தன. எனினும், இந்த சந்திப்பில் பசில் ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.

நேற்று மாலை இந்த சந்திப்பு நடந்தது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் கூட்டணியாக- இரண்டு கட்சிகளின் பெயர் அடையாளங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுதந்திர மக்கள் முன்னணி என்ற பெயரை இரு தரப்பும் தெரிவு செய்துள்ளது.

எனினும், சுதந்திரக்கட்சியின் பல உறுப்பினர்கள் இன்னமும், கட்சியின் அடையாளத்தை விட்டுக்கொடுக்கும் முடிவில் இல்லை. சு.கவின் தரப்பிலிருந்து இதுவரை 34 எம்.பிக்கள் கட்சி தாவி பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். மிகுதி உறுப்பினர்கள், சு.கவின் அடையாளத்தை பேண விரும்புவதாக தெரிகிறது.

இந்த இணக்கப்பாடு இரண்டு தரப்பு தலைவர்கள் மத்தியிலுமே ஏற்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் முக்கியஸ்தர்களிடம் இன்னமும் கலந்துரையாடப்படவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]