மைத்திரி – மஹிந்தவின் பொது எதிரியாகிய ரணில்

உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியை பொது எதிரியாக பார்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பொது எதிரியாக பார்க்காமல் இருப்பது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியில் நடவடிக்கையில் பங்கேற்றால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது பொது எதிரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியே பொது எதிரி என்றும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]