மைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ

மைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அனைத்துதுறைகளும் மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்ற நிலையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘அரசாங்கத்தின் இயலாமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வெளிப்பட்டுள்ளது. நாடு தற்போது அதலபாதாளத்திற்குள் சென்றுகொண்டிருக்கிறது.

அனைத்துதுறைகளுமே மிகவும் மோசமான வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதோடு, நிர்வாக சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த ஒரு சூழ்நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது தற்போதைய அரசாங்கத்தினால் முடியாத காரணமாகும். எனவே, தேர்தல் ஒன்றின் ஊடாக இதற்கு தீர்வுகாண முடியும்’ என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]