மைத்திரியை அசிங்கப்படுத்த ஐ.தே.கயினர் செய்த வேலை என்னவென்று தெரியுமா?

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழலில் ஜனநாயகத்தை உறுதி செய்து உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி நேற்று மாலை ஐக்கிய தேசிய கட்சி வாகன பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாகனங்களில் காலி முகத்திடல் வழியாக அலரி மாளிகை பகுதிக்கு வந்த போது அங்கு ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட குழுவினர் பேரணியை வரவேற்றனர்.

இதன் போது ஒரு குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போல முகமூடி அணிந்த ஒருவரை வாகனம் ஒன்றில் ஏற்றி வந்தனர். மைத்திரியின் முகமூடி அணிந்திருந்தவர் அனைவருக்கும் அப்பம் வழங்கியபடி வந்தார்.

மைத்திரியை

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேன மஹிந்த தரப்பை விட்டு ஐக்கிய தேசிய முன்னணி பக்கம் வருவதற்கு முன்னிரவு மஹிந்த ராஜபக்சவுடன் அப்பம் சாப்பிட்டிருந்தார். இரவு அப்பம் சாப்பிட்ட பின் மகிந்தவுக்கு மைத்திரி துரோகம் செய்தார் என பலரும் அந்நேரம் கருத்துக்களை பரப்பி வந்தனர்.

இப்போது மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு துரோகம் செய்து மீண்டும் மஹிந்த பக்கம் போய்விட்டார் என்பதை கேலி செய்யும் வண்ணமே இந்த செயலை ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் செய்துள்ளனர்.

மைத்திரியை போன்று முகமூடி அணிந்த நபர் அப்பம் கொடுக்கும் படங்கள் சமுக வலைத்தளத்தில் பரவலாக பரப்பபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]