மைத்திரியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே என்று உயர்நீதிமன்றம், ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்திருப்பதாக, தெரிவிக்கப்படுகிறது.

தமது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா அல்லது ஆறு ஆண்டுகளா என்பதை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு அமைக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.

இதையடுத்தே, ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் மாத்திரமே என்று உயர்நீதிமன்ற நீதியரசர்களின் அமர்வு ஒருமனதாக முடிவெடுத்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு தமது முடிவை நேற்று ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]