மைத்திரியின் அதிரடி ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அதிர்ச்சி

மைத்திரியின் அதிரடி ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அதிர்ச்சி. சு.கவில் மேலும் பிளவு வலுப்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிகவரெட்டி தொகுதியின் அமைப்பாளராக இருந்த மஹிந்த அணியின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ட் பெர்ணான்டோவை நீக்கி குறித்த பதவிக்கு பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்கவை சு.கவின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜாக்ஷவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ முக்கியமானவர். இவர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் நல்லாட்சி அரசால் சுமத்தப்பட்டுள்ளதுடன், பல தடவைகள் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவர் நேற்றுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டைகளின் ஒன்றான நிக்கவரெட்டி தொகுதியின் அமைப்பாளராகப் பதவி வகித்து எந்தார். ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் அதிரடி நடவடிக்கையில் நேற்றுமுதல் அப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தொகுதிக்கு பிரதி அமைச்சர் இந்திய பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக சு.கவின் உயர்பீடம் அறிவித்துள்ளது.

மே தினம், உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என பரபரபான சூழலின் ஜோன்ஸ்ட் பெர்ணான்டோவின் பதவி பறிப்பானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அத்துடன், பொது எதிரணி அடுத்த வாரம் அளவில் மே தினம் தொடர்பில் கூடி பேச தீர்மானித்திருந்தது. இந்நிலையில் இந்தப் பேச்சுகளில் இந்தப் பதவி பறிப்பு கருப்பொரளாக அமையும் எனவும் அறிய முடிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]