மைத்திரிபால சிறிசேன ஓர் முட்டாள் என மிகவும் மோசமாக திட்டிதீர்த்த மங்கள

நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் முட்டாள் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவும் இணைந்து கொண்டிருந்தார்.

மங்கள தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

உங்களது வியர்வையில் வந்த இவரைத்தான், இதுவரையில் எங்களது ஜனாதிபதி என்று நாங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டோம். நல்ல சுத்த சிங்களத்தில் சொல்ல வேண்டும்.

எங்களை மிகவும் இழிவாக பேசிய போதெல்லாம் நாம் ஒழுக்கமானவர்கள் என்ற அடிப்படையில் நாம் அமைதி பேணியிருந்தோம்.

இனி அவ்வாறு மரியாதை அளிக்க வேண்டிய அவசியமில்லை.

நிச்சயமாக மைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கையொப்பமிட இருக்கின்றோம். இந்த முட்டாளின் (ஜனாதிபதியின்) வாதத்தை பாருங்கள் தற்பொழுது அவரை கொல்ல முயற்சித்ததாகவும் அதனை நாம் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறுகின்றார்.

அப்படிச் சொல்லும் மனிதன் தற்பொழுது பிரதமர் பதவியை யாருக்கு வழங்கியிருக்கின்றார். தன்னைக் கொலை செய்யவிருந்த மிகவும் முக்கியமான ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குகின்றார்.

அவர் தன் வாயால் தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாக மஹிந்த மீது குற்றம் சுமத்தியிருந்தார். எங்களது பக்கம் கொலை செய்யப்பட உள்ளதாகக் கூறி மிகப் பெரிய கொலைகாரனுடன் இணைந்து கொள்கின்றார்.

சட்டவிரோதமான முறையில் பலவந்தமாக தற்பொழுது செயற்பட்டு வருவதாக மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]