மைத்திரிபால சிறிசேனவுக்கு மஹிந்தவி்ன் ஆதரவு தேவை

மஹிந்த ராஜபக்ஷவின் ஆசியின்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 2020 நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட முடியாது என்று, ஸ்ரீலங்கா சுத்தந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த மஹிந்த ராஜபக்ஷவும், இணைந்து செயற்பட இணங்கியுள்ளனர்.

2010 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொருத்தமானவர் என்று, ராஜபக்ஷ சகோதரர்களான, கோட்டாபய , பசில், சமல் மற்றும் எஸ்.பி.திசநாயக்க என்று பல்வேறு தரப்பினரும், பல்வேறு பெயர்களை முன்மொழிகின்றனர்.

அமைச்சர் துமிந்த திசநாயக்கவோ, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தான் என்று கூறுகிறார். அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அவர் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஒப்புதலளிக்க வேண்டும். அவரது ஆசி இருக்க வேண்டும்” என்றபர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]