மைத்திரிக்குச் சூனியம்!

பதவிய, கெப்பித்திகொல்லாவ பிரதான வீதியின் அருகிலுள்ள பஹல உஸ்கொல்ல மயானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த சூனியமொன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது எனத் தெரியவந்துள்ளது.

அந்தச் சூனியத்துடன் வைக்கப்பட்டிருந்த செப்புத் தகடொன்றில் ஜனாதிபதியின் பெயருடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் மூன்று சகோதரர்களினதும், மாகாண சபை உறுப்பினர்கள் இருவரினதும், மற்றொருவரினதும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு அப்பிரதேசத்தைச் சேர்ந்த மந்திரவாதியொருவர் மூலம் தயாரிக்கப்பட்ட இந்தச் சூனியத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் பாழடைந்து போகவேண்டுமென துஷ்ட தேவதைகளிடம் பிரார்த்தனை செய்யப்பட்டிருக்கின்றது எனவும் தெரியவருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]