மே 1ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையிலான சைனா ஈஸ்டன் விமான சேவை ரத்து!

எதிர்வரும் மே 1ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையிலான சைனா ஈஸ்டன் விமான சேவை தனது சேவையை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது.

வாரத்திற்கு 4 முறை கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையில் பயணங்களை  மேற்கொண்டு வந்தது. கொழும்பு மற்றும் பீஜிங் இடையிலான விமான சேவை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.

சைனா சதர்ன் மற்றும் எயார் சைனா விமான சேவைகள் கொழும்பிற்காக தமது விமானப் பயணங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானத்தை செலுத்தி வருவதாக குறித்த விமான சேவை நிறுவனங்களின் உள்ளூர் முகவர் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]