மே மாதமும் மழை கிடைக்காவிடின் தொடர்ந்தும் மின்சாரம் துண்டிக்கப்படும்- எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார பொறியியலாளர்கள்

எதிர்வரும் மே மாதத்திற்குள் போதியளவு மழை கிடைக்காவிடின் தொடர்ந்தும் மின்சார விநியோக துண்டிப்பு காலநேர அட்டவணையை நீடிக்க நேரிடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர் – மின்சார உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் மழை கிடைக்காவிடின் மின்சார உற்பத்தியில் பாரிய சிக்கல் ஏற்படக் கூடும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவசர மின்சார கொள்வனவிற்கு மின்சக்தி அமைச்சினால் தற்போதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இதன்காரணமாக பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார பொறியிலாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

தற்போது நான்கு மணித்தியால மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், சில பிரதேசங்களில் குறித்த நேரத்திற்கு அதிகமான நேரம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார துண்டிக்கப்படும் நேரம் மற்றும் பிரதேசங்கள் தொடர்பான விபரங்களை நேற்று மின்சக்தி அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டமை குறிப்பிடதக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]