மே தின கூட்டங்கள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் நாட்டின் பல பாகங்களில் மேதின கூட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் அரசியல்வாதிகள் சிலர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.

அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இருக்கும் மேடைக்கு தான் செல்வதில்லை என, கொள்கை ரீதியில் தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தனது கட்சியின் மே தினக் கூட்டத்தின் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பிரதேச மக்களுடன் மே தினக் கூட்டத்துக்கு செல்வதாக கூறியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அரசாங்கத்திலிருந்து விலகிய குழுவிலுள்ள 16 பேரில் ஒரு சிலரே கலந்துகொள்ளவுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன்,மகனின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதனால் மே தினக் கூட்டத்துக்கு வரமுடியாது என, லக்ஷ்மன் யாபா அபேவர்தன கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முறை மேதினக் கூட்டம், தலவாக்கலை பொது மைதானத்தில் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது மே தின நிகழ்வுகளை நுவரெலியா நகரில் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]