மே தினத்தில் ஐ.தே.கவின் முகவரி காணாமல் போய்விடும் : மஹிந்த அணிக்கும் அழைப்புவிடும் சு.க.

மே தினத்தில் ஐ.தே.கவின் முகவரி காணாமல் போய்விடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறினார்.

 டிலான் பெரேரா
டிலான் பெரேரா

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது. நாடு பூராகவும் இருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்த மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது தொழிலாளர்களின் உரிமைக்காக வரலாற்றில் குரல் கொடுத்தக் கட்சி. அதன் அடிப்படையிலேயே அதிகளவான தொழிற்சங்கங்கள் சு.கவுடன் இணைந்துச் செயற்படுகிறன்றன.

இம்முறையும் அனைத்துத் தொழிற்சங்கங்களையும், எமக்கு ஆதரவான கட்சிகளையும் இணைத்துக்கொண்டு சிறந்த ஒரு மேதினத்தை நடத்திக் காட்டுவோம். பொது எதரணியையும் எம்முடன் இணையும் மாறு அழைப்பு விடுத்துள்ளோம்.

பொது எதிரணியில் உள்ள ஒருசில இனவாதிகளின் கயிற்றை பிடித்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி பயணிக்கின்றார். இதன் காரணமாக நாட்டு மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் குறைவடையுமே தவிர ஆதரவு பெருக்கமடையாது.

சு.க. என்பது ஒரு இனவாதக் கட்சியல்லை மாறாக நாட்டில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டு மத்திய நிலைப்பாட்டில் பயணிக்கும் கட்சியாகும். இதுவே கட்சியின் கொள்ளையும் ஆகும். கிராமத்து மக்கள் இனவாதிகளுடன் செல்லாது சு.கவுடன் இணைந்துச் செல்லுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு கூறுகின்றனர்.

எதிரணியில் உள்ள சு.கவினர் ஒருமித்த சு.கவாக பயணிக்க ஒன்றிணைய வேண்டும். அன்போது மேதினக் கூட்டத்தில் கூடும் கூட்டத்தை கண்டும் ஐ.தே.கவின் முகவரி காணாமல் போய்விடும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]