மே தினக் கூட்டத்தில் 20 இலட்சம் பேர் கலந்துக்கொள்வர் – மஹிந்த அணி

கொழும்பு, காலிமுகத்திடலில் நடக்கவுள்ள மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்துக்கு 20 இலட்சம் பேர் எதிர்பார்க்கப்படுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

பந்துல குணவர்தன
பந்துல குணவர்தன

கடந்த காலங்களில் பொது எதிரணி நடத்திய பல்வேறு கூட்டங்கள் பற்றிக் கேலி பேசி வந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் இம்முறை எங்களது மே தினக் கூட்டத்துக்கு வரும் பெருந்திரளான மக்களைப் பார்த்து அசந்துபோவது நிச்சயம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும், அவர்களது குடும்பத்தினரையும், இந்த நாட்டுக்காக தங்களது உயிர்களைத் தியாகம் செய்திருக்கும் முப்படையினரையும் எள்ளிநகையாடிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு காலிமுகத்திடலில் கூடவுள்ள இலட்சக்கணக்கான மக்கள் நல்ல பாடமொன்றைக் கற்பிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]