மேஷ ராசியினரே! எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள் இன்று – ஏனைய ராசியினருக்கு எப்படி?

மேஷம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

ரிஷபம்

சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அமோகமான நாள்.

மிதுனம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்

யதார்த்தமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.

கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

துலாம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். மற்றவர்களைப் பற்றி  வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

குடும்பத்தில் சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந்துப்போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட் சியம் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடை களை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்
கள். மனதிற்கு இதமான செய்திவரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். இனிமையான நாள்.

மகரம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடு வார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்

கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மீனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்.  வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]