மேல் மாகாண சபையின் கணணிகளில் ஆபாச மற்றும் சமூக இணையத்தளங்களுக்குத் தடை

மேல் மாகாண சபை சபா மண்டபத்தில் உறுப்பினர்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட கணனிகளில் ஆபாச இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை பார்வையிட முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த திங்கட்கிழமை சபையில் சமர்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சில உறுப்பினர்கள் சபையில் இருந்த கணணியில் ஆபாசக் காட்சிகளை பார்வையிட்டனர்.

அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இந்த நிலையில் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவின் பணிப்புரையின் கீழ் சபா மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள கணணிகளில் ஆபாச இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களைத் தடை செய்துள்ளதாக மாகாணத்தின் பிரதம செயலாளர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்கள் குணசிறி ஜெயநாத், சுமித் சொய்சா மற்றும் கீர்த்தி காரியவசம் ஆகிய மூவரும் சபை அமர்வு இடம்பெற்ற வேளை கணணியில் ஆபாச இணையத்தளத்தைப் பார்வையிட்டனர் என்பது காணொலி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]