புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனக்கு ஆதரவானவர்களை திரட்டும் கடும் முயட்சியில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் தாவல்கள் தினமும் நடந்து கொண்டே உள்ளது.
இந்நிலையில் இன்றும் மஹிந்த தரப்பில் 5 பேர் இணைந்து கொள்வார்கள் என வெளிவந்துள்ள தகவலால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது.
இதுவரை அவர்கள் யார் என அறியப்படாத காரணத்தால் பல சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளது.
அதே வேளை இன்று இறுதி தீர்மானத்துக்காக கூடியுள்ள ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவ்வாறான முடிவை எடுத்துள்ளது என்பது தொடர்பிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
இன்று புதிதாக 5 பேர் இணையவுள்ள விடயத்தை மஹிந்த தரப்பின் பாராளும்னற உறுப்பினர் ரோஹித்த அபயக்குனவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் மஹிந்த ஆதரவு ஆரப்பட்டத்தின் பின் குறித்த 5 பேரும் மஹிந்த தரப்பில் இணைந்து கொள்வர் என அவர் கூறியுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]