மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கவும்

மேலதிக வகுப்புக்கள்

அறநெறி பாடசாலைகள் நடத்தப்படுகின்ற ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன், அறநெறி பாடசாலைகளால் சிறுவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய விகாரையின் மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]