மேற்கு லண்டன் தீ விபத்துக்கு இலங்கை அரசாங்கம் இரங்கல்

மேற்கு லண்டனில் தொடர்மாடிக் கட்டடத் தீ விபத்தினால் ஏற்பட்ட பேரழிவுக்கு, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கை அரசின் சார்பில், தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அன்பான உறவினர்களுக்குத் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்ததுடன், காயங்களுக்கு உள்ளானவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தத்தினால் இலங்கையர்கள் எவருக்கும் எந்ததொரு பாதிப்பும் இல்லை. இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – i[email protected]