மேற்கிந்திய தீவுகள் பயணமாகிறது பாகிஸ்தான்.

மேற்கிந்திய தீவுகள் பயணமாகிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.

கடந்த 2013  ம் ஆண்டிற்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகள் செல்கிறது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 3-1 எனக் கைப்பற்றியது. T20 தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

அண்மைய நாட்களில் மோசமான தோல்விகள் கண்டுவரும் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு இந்த தொடர் என்பது வலுவான போட்டி மிக்கதாக அமையவுள்ளது.