மேற்கிந்தியத் தீவுகள் பாகிஸ்தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று

மேற்கிந்தியத் தீவுகள் பாகிஸ்தான் அணிகளும் மோதும் 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதலாது ஒருநாள் ஆட்டம் இன்று கயானாவில் நடைபெறவுள்ளது.

சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் 31 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளும் மோதும் 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் இன்று கயானாவில் நடக்கிறது. இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை இழந்ததால் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இந்தப் போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]