மேதின கூட்டத்தை புறக்கணித்த ஐ.தே.க முக்கியஸ்தர்கள்

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் நேற்று நடத்தி மே தின பேரணியில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை.

கொழும்பு சுகததாச உள்ளரங்கில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது.

தவிசாளரான கபீர் காசிம், உபதலைவர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் சாகல ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர்கள், வசந்த சேனநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, பாலித ரங்க பண்டார, பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமிந்த விஜேசிறி, பந்துல பண்டாரிகொட உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவில்லை.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் மீது அதிருப்தி கொண்டுள்ளதால் ஐதேகவின் மே தின கூட்டத்தை கட்சியினர் பலரும் புறக்கணிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், கபீர் காசிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மே தின பேரணியில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உறவினரின் மரணச்சடங்கில் சமிந்த விஜேசிறி பங்கேற்றதாலும், காலியில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் ரவி கருணாநாயக்க பங்கேற்றதாலும் மே தின பேரணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]