படையினரின் பாவனையில் இருந்த மேலும் ஒரு தொகுதி பொது மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்பு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது

யாழ்குடாநாட்டில் படையினரின் பாவனையில் இருந்த மேலும் ஒரு தொகுதி பொது மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்பு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது

காணிவிடுவிப்பின் 16வது கட்டமாக யாழ் வலி வடக்கு வயாவிளான் வடமூலை பகுதியில் இதுவரைகாலமும் படையினரின் பாவனையில் இருந்த 29 ஏக்கர் நிலப்பரப்பு மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது

இதன் அடிப்படையில் வயாவிளான் அச்சுவேலியை இணைக்கும் பிரதான வீதி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது அத்துடன் வசாவிளான் ஜே-205 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள உத்தரியமாத ஆலயம் மற்றும் றோமன்கத்தோலிக்க பாடசாலை உள்ளிட்ட விவசாய நிலங்கள் ஒருதொகுதி மற்றும் பொது மக்களின் குடியிருப்பு நிலங்களும் இவ்வாறு இன்று விடுவிக்கப்பட்ட பகுதியில் அடங்குகின்றன

இன்று வசாவிளான் உத்தரியமாதா ஆலய முன்றலில் நடைபெற்ற நிகழ்வில் காணிகளை விடுவித்ததற்கான உறுதிச்சான்றிதளை யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்தார்

உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வயாவிளான் பகுதி மக்கள் இம் மாத முற்பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை பலாலி இராணுவ நுழைவாயிலில் மேற்கொண்டிருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையினை கேட்டறிந்த கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தளபதியுடன் பேசி வெகுவிரைவில் காணி விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்த்நிலையில் இக்காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலதிய மாவட்ட காணி ஆணையாளர் எஸ்.முரளிதரன் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்

தமது காணிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பால் மொதுமக்கள் படையினருக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]