மேசன் தொழிலாளியின் சடலம் மீட்பு

மேசன் தொழிலாளியின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்திலுள்ள பலநோக்குக் கட்டட நுளைவாயிலிலிருந்து திங்கட்கிழமை (17) இரவு மேசன் தொழிலாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சடலம் செங்கலடி கணபதிப்பிள்ளை புதிய நகர் கிராமத்தைச் சேர்ந்த கந்தலிங்கம் உதயகுமார் (வயது 48) என்ற குடும்பஸ்தருடையது என உறவினர்கள் பொலிஸாரிடம் அடையாளம் காட்டியுள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக தன் மனைவியையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து தனது தாயுடன் வாழ்ந்து வந்த இவர் ஒரு கட்டிடத் தொழிலாளி என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உடற்கூறாய்வுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]