மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை- முள்ளியவளையில் சம்பவம்

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Information Technology and management பிரிவில் கல்விகற்று வரும் 24 அகவையுடைய இராசநாயகம் நிறோசிகா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கள் விழாவில் கலந்து கொள்வதற்காக முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கடந்த 26 ஆம் திகதி சென்றதாக குறிப்பிட்டப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த மாணவி நேற்று காலை அவரது வீட்டு முற்றத்தில் நின்ற மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார் என பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]