மெஸ்சியின் தண்டனையை ரத்துசெய்தது பிபா

ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சியின் நான்கு போட்டிக்கான தடையை பிபா மேல்முறையீடு குழு ரத்துசெய்துள்ளது. இதனால் உருகுவே, வெனிசுலா, பெரு நாடுகளுக்கு எதிரானப் போட்டிகளில் மெஸ்சி விளையாடவுள்ளார்.

ஆர்ஜென்டினா அணியின் தலைவரும், பார்சிலோனா அணியின் முன்னணி வீரருமான மெஸ்சி, சிலி நாட்டிற்கு எதிரானப் போட்டியின்போது நடுவரை தகாத வார்த்தைகளால் பேசியதாக முறைப்பாடு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய உலக கால்பந்து நிர்வாகக்குழு நான்கு போட்டியில் விளையாட மெஸ்சிக்குத் தடைவிதித்தது.

இதனால் உலகக்கிண்ணப் போட்டிக்கானத் தகுதிச் சுற்றில் மெஸ்சி பொலிவியாவிற்கு எதிரானப் போட்டியில் விளையாட முடியாமல் போனது. இதில் ஆர்ஜென்டினா 02 எனத் தோல்வியடைந்தது.

இன்னும் உருகுவே, வெனிசுலா மற்றும் பெரு நாட்டிற்கு எதிராக ஆர்ஜென்டினா விளையாட வேண்டியுள்ளது. இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால்தான் நேரடியாக உலகக்கிண்ணத்திற்குத் தகுதிபெற முடியும் என்ற நிலையில் ஆர்ஜென்டினா அணிக்கு உள்ளது.

மெஸ்சியின்

இதனால் மெஸ்சிக்கானத் தடையை எதிர்த்து பிபாவின் மேல்முறையீடு குழுவிடம் ஆர்ஜென்டினா சார்பிலும், மெஸ்சி சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது மெஸ்சின் தடை உத்தரவை பிபா ரத்து செய்தது. மேலும் சுமார் 10 ஆயிரம் டாலர் அபராதத்தையும் ரத்துசெய்தது.

இதனால் ஓகஸ்ட் 31ஆம் திகதி உருகுவேயிற்கு எதிரானப் போட்டியிலும், வெனிசுலாவிற்கு எதிராக செப்டம்பர் 5ஆம் திகதிப் போட்டியிலும், பெருவிற்கு எதிராக அக்டோபர் 5ஆம் திகதி நடக்கும் போட்டியிலும் மெஸ்சி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]