மெர்சலா? ஆளப்போறான் தமிழனா? குழப்பத்தில் படக்குழு

மெர்சலா? ஆளப்போறான் தமிழனா? குழப்பத்தில் படக்குழு.

மெர்சலா? ஆளப்போறான் தமிழனா?

மெர்சல் படத்தின் டீஸர் யூ-டியுப்பில் (YouTube) பல சாதனைகளைச் செய்துள்ளது. அதிக லைக்ஸ், அதிக லைக்ஸ் கிடைத்த டீஸர், மற்றும் டீஸர் ஒரு கோடி தடவை பார்க்கப்பட்டுள்ளது.

அதே போன்று அதிகமான டிஸ்லைக் கூட இப்படத்தின் டீஸர்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

படத்திற்கு பேரிடியாக தயாரிப்பாளர் ராஜேந்திரன் மெர்சல் எனும் பெயருக்குத் தடை வழங்கச் சொல்லி வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.

அதாவது அவர் ஏற்கனவே “மெர்சலாகிட்டேன்” என்ற பெயரில் படத்தின் பெயரைப் பதிவு செய்திருந்தார் எனவும், தற்போது விஜய் நடிப்பில் அட்லீ இயக்கும் மெர்சல் இப்படத்தால் தனது படத்திற்கு பாதிப்பு வரும் எனவும் வழக்கில் குறிப்பிட்டுருந்தார்.மெர்சலா? ஆளப்போறான் தமிழனா?

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் மெர்சல் எனும் படத்தின் பெயரைப் பாவிப்பதற்குத் தாற்காலிகத் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது.

அதாவது அக்டோபர் 3ந் திகதி வரை எந்த விளம்பரத்திலும் மெர்சல் எனும் பெயரைப் பாவிக்கக்கூடாது எனத் தடை போடப்பட்டிருந்தது.

ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை மீண்டும் வருமேயானால், படத்திற்கான தடை நீடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதால் படக்குழுவினர் படத்தின் பெயரை மாற்றுவதிலும் அக்கறை செலுத்தியுள்ளனர்.மெர்சலா? ஆளப்போறான் தமிழனா?

அதாவது “ஆளப்போறான் தமிழன்” எனும் பாடலையே படத்தின் தலைப்பாக வைக்கலாமா? எனவும் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.

அக்டோபர் 3ந் திகதிக்குப்பின் தான் தெரியும் படத்தின் பெயர் மெர்சலா? அல்லது ஆளப்போறன் தமிழனா?

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]