மெராயா நகரத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு அச்சுறுத்தல்

மெராயா நகரத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் சிலர் பாடசாலைச மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பாடசாலைக்கு அழைத்துச்செல்லும் தாய்மார்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டை மத்திய மாகாணசபை உறுப்பினரும், நுவரெலியா பிரதேச அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான பீ. சத்திவேல் ஆதங்கத்துடன் நேற்று நடைபெற்ற நுவரெலியா பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முன்வைத்தார்.

இக்கூட்டத்தின்போது, பல அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு நானுஓயா நகரத்தில் பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ்வண்டிகள் நிறுத்தப்படுவதில்லை எனத் தேசிய தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் என்டனிராஜிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
நுவரெலியா தலவாக்கலை, நுவரெலியா ஹட்டன், நுவரெலியா டயகம போன்ற பஸ்களில் நானுஓயா நகரத்தில் குறிப்பிட்ட கடைக்கு முன்பாகவே நிறுத்துவதால் பஸ்ஸிற்காக காத்திருக்கும் பயணிகளை கடை உரிமையாளர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், மழை காலங்களில் ஒதுங்குவதற்கு சரியான இடம் ஒன்றும் இல்லாததால் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ்தரிப்பு நிலையத்தில் அனைத்து பஸ்வண்டிகளும் நிறுத்துவதற்கு ஆவண செய்யுமாறும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் என்டனிராஜ் இச்சபையில் முன்வைத்தார்.

மேலும் நுவரெலியா, தலவாக்கலை, டெஸ்போட், கிரிமெட்டிய வழியாக செல்லும் பாதையில் போக்குவரத்துகள் முறையாக இடம்பெறுவதில்லை என பல தடவை அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பேசப்பட்டபோதும் எந்தவொரு தீர்வும் எட்டாததால் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமார் தேசிய தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் என்டனிராஜ் ஆகியோர் பெறும் எதிர்ப்பை தெரிவித்தனர். வெகுவிரைவில் நேர அட்டவணையை திருத்தியமைக்குமாறு இதன்போது இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கும், தனியார் போக்குவரத்துச் சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மத்திய மாகாண சபை உறுப்பினர் பீ. சத்திவேல் சபையில் உரையாடுகையில், மெராயா நகரத்தில் ஒரு சில முச்சக்கரவண்டி சாரதிகள் ஆசிரியைகள், மாணவ மாணவிகள், பிள்ளைகளை அழைத்துச்செல்லும் தாய்மார்கள் போன்றவர்களின் தகாத வார்த்தைகளால் பரிகாசம் பண்ணுகிறார்கள்.

இந்த விடயம் தொடர்பாக என்னிடம் பல்வேறு முறைப்பாடுகள் வந்துள்ளன. மெராயா நகரத்தில் செல்லும் பாதையானது ஒரு வாகனம் மட்டும் பயணிக்க கூடிய பாதை. ஆகையால் எனது முயற்சியால் அந்தப் பாதையை அகலப்படுத்தினேன். எனது வீட்டிற்கு முன்பக்கம் அமைக்கப்பட்டிருக்கும் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் பதிவுசெய்யப்படாத ஒரு சங்கமாகும்.

உடனடியாக இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கும்படியாகவும் அவ்விடத்தில் நகரத்திற்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்குமாறும் கேட்டுக்கொண்டார். அவர்களின் பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் எனது ஊரில் உள்ளவர்கள்தானே என நியாயம் கேட்டால் விக்கட் கம்புகள், துடுப்புகளை கொண்டுவந்து அச்சுறுத்துகிறார்கள். இதை சிலர் படிப்பறிவில்லாதவர்கள் கட்சி ரீதியான செயலாகவும் தக்கவைத்துக்கொண்டார்கள். ஆகையால் இது தொடர்பாக இச்சபையில் முற்றுப்புள்ளி ஒன்று வைக்குமாறு கேட்டார்.

மெராயா நகரத்தில்

சபையின் இணைத்தலைவரான் எஸ்.பி. ரத்நாயக்க இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா பிரதேச சபையினரும், லிந்துலை பொலிஸாரும் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடடார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]