மெய்சிலிர்த்து போய் தமிழில் டுவிட் செய்த வீரேந்திர ஷேவாக்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் நடத்தும் அமைதியான போராட்டத்தை பார்த்து கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் 2வது முறையாக டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்னர் தமிழர்களின் போராட்டம் அற்புதமாக இருக்கிறது என்று டுவிட் செய்த இவர், தற்போது இரண்டாவது முறையாக தமிழில் டுவிட் செய்துள்ளார்.

“அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியை தொடருங்கள். அன்புடன்” என்று டுவிட் செய்துள்ளார்.

சேவாக்கின் இந்த டுவிட்டிற்கு பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.