மென்டிஸ் நிறுவன மனு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது

பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸின் நிறுவனத்தின் மீதான வழக்கொன்று பிற்போடப்பட்டுள்ளது.

அவருக்கு சொந்தமான எம்.மெண்டிஸ் மதுபான நிறுவனத்தின் வங்கிக் கணக்கு, இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் குழாமில் உள்ள நீதிபதியொருவர் விலகிக் கொண்டுள்ளதால் அந்த மனுவை அடுத்த மாதம் 03ஆம் திகதி வரை பிற்போடுவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, நீதிபதி பிரசன்ன ஜயவர்தன, வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

பிணைமுறி மோசடி சம்பவத்தின் பின்னர் தமது நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ளதால், ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]