மெத்தியூஸ் இராஜினாமா சந்திமால், தரங்க புதிய தலைவர்கள்

இலங்கை அணியின் தலைவராக 2013ஆம் ஆண்டுமுதல் செயற்பட்டுவந்த எஞ்சலோ மெத்தியூஸ் தீடீரென நேற்று இரவு இலங்கை கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு சபையுடன் இடம்பெற்ற பேச்சுகளை அடுத்த பதவிவை இராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து இன்று ரி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் புதிய தலைவராக உபுல் தரங்கவும், டெஸ்ட் போட்டிகளின் தலைவராக தினேஸ் சந்திமாலும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிம்பாபே அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 23 இலங்கை அணி இழந்தமையாலேயே எஞ்சலோ மெத்தியூஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார். அத்துடன், கடந்த சில மாதங்களாக இலங்கை அணி தொடர் தோல்வியையே சந்தித்து வருகிறது. தலைமைத்துவத்தில் உள்ள பலவீனம் காரணமாகவே இலங்கை அணி இவ்வாறு தொடர் தோல்விகளை சந்தித்துவருவதாக மெத்தியூசுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டமையே இவரின் பதவி விலகளுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மெத்தியூஸ்,
கடந்த சில மாதங்களாக நாங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றமையால் தான் எனது பதவியை இராஜினாமா செய்கின்றேன். என்னை விட அணியை சிறந்த முறையில் வழிநடத்தக் கூடிய வீரர்கள் உள்ளனர். எனவே, இலங்கை அணி வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரினதும் ஆசை அதற்காகவே நான் பதவி விளகுகின்றேன் எனக் கூறினார்.

புதிய தலைமைத்துவங்களை பெற்றுள்ள சந்திமால் மற்றும் தரங்க ஆகியோர் கூறியுள்ளதாவது, தங்கள் மீது நம்பிக்கைவைத்து பொறுப்பை ஒப்படைத்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நம்பிக்கையை நாங்கள் பாதுகாப்போம் என்றுக் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]