மெக்ஸிகோவில் எரிபொருள் குழாய் வெடித்தில் 20 பேர் பலி!

எரிபொருளை கொண்டு செல்லும் குழாய் வெடித்து தீப்பற்றியதில் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் மெக்ஸிகோவின் மத்திய பகுதியில் நிகழ்ந்துள்ளது.

குழாய் வெடித்து எரிபொருள் கசிவு ஏற்பட்டு, தீப்பரவல் இடம்பெற்றுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது 44 காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளியேரிய எரிபொருளை சேகரிக்க சென்றவர்களே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

எரிபொருள் குழாயில் எவ்வாறு திடீர் வெடிப்பு ஏற்பட்டது என்பது தொடர்பில் உடனடியாக கண்டறியப்படவில்லை.

இந்தநிலையில், பரவியுள்ள தீயினை கட்டுப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]