மெக்சிகோ வில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

மெக்சிகோ வில் கடலோர மாகாணமான சியபஸ் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 8.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள், வானுயர்ந்த கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.(Photo credit should read ALFREDO ESTRELLA/AFP/Getty Images)

நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் சேதம் விவரங்கள் குறித்து முழுமையான தகவல் ஏதும் வெளியாகவில்லை. பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நிலநடுக்கம் ஏற்பட்ட முதல் மூன்று மணி நேரங்களில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோ கடற்கரை, கவுதமாலா, எல் சல்வடோர், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா ஹோண்டரஸ் மற்றும் ஈகுவடார் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]