மெக்சிகோவில் ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி

மெக்சிகோவில் ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகில் முதற்தடவையாக இவ்வாறான ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

கடந்த (சனிக்கிழமை) ஆரம்பமாகிய இப்போட்டியில், அவுஸ்ரேலியாவிலிருந்து வியட்நாம் வரையான உலக நாடுகளிலிருந்து 150இற்கும் மேற்பட்ட சிறுவர் குழுக்கள் பங்கேற்றுள்ளன.

இதில் விஞ்ஞானம், கணிதம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற துறைகள் அனைத்திலும் மிகுந்த நுண்ணறிவைக் கொண்ட சிறுவர் குழுக்களே இப்போட்டியில் பங்கேற்றுள்ளன.

இப்போட்டியில், 14 தொடக்கம் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மாத்திரமே கலந்துகொள்ள முடியும். இப்போட்டியில் சிறந்த ரொபோவினை தயாரிக்கும் சிறுவர் குழுவிற்கு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் விஞ்ஞானம், தொழிநுட்பம், கணிதம், பொறியியல் போன்ற பாடத் துறைகளில் ஆர்வத்தைக் அதிகரிப்பதற்காகவே இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]