மூளையில் 30 நாடாப்புழு முட்­டைகளினால் கடும் தலைவலிக்கு உள்ளான நபர்!

ஒரு வருட கால­மாக கடு­மை­யான தலை­வலி, வாந்தி மற்றும் காய்ச்­ச­லுடன் கூடிய வலிப்பு என்­ப­வற்றால் பாதிக்­கப்­பட்ட நிலையில் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட நப­ரொ­ரு­வரின் மூளையில் 30 க்கு மேற்­பட்ட நாடாப் புழு முட்­டைகள் இருப்­பதை கண்­ட­றிந்து மருத்­து­வர்கள் அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

தென்­மேற்கு சீனாவில் குயி­ஸொயு பிராந்­தி­யத்தைச் சேர்ந்த வூ என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் 46 வயது நபரின் மூளை­யி­லேயே இவ்­வாறு அள­வுக்­க­தி­க­மான நாடாப்புழு முட்­டைகள் இருப்­பது மருத்­து­வ­மனை ஊடு­காட்டும் கருவி பரி­சோ­தனை மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அந்த முட்­டை­களில் சில ஒரு சென்­ரி­மீற்றர் அள­வான விட்­டத்தைக் கொண்­டி­ருந்­த­தாக மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர். வூ சமைக்­காத அல்­லது சரி­யான முறையில் சமைக்­கப்­ப­டாத பன்றி இறைச்­ சியை உண்­டமை கார­ண­மா­கவே அவருக்கு மேற்­படி நாடாப் புழு தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக நம்­பு­வ­தாக மருத்­து­வர்கள் கூறு­கின்­றனர்.

இந்தப் புழு முட்­டைகள் கார­ண­மாக மூளையில் அள­வுக்­க­தி­கமாக நீர் சேர்ந்து வூ கடும் உடல்­நலப் பாதிப்­புக்­குள்­ளாக நேர்ந்­த­தாக அவர்கள் கூறு­கின்­றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]