மூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க? அப்போ கண்டிப்பா படிங்க

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம்.

மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்:

27 நட்சத்திரங்களின் வரிசையில் 19 ஆவது இடத்தை பெறுவது மூலம் நட்சத்திரமாகும். இந்த மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான்.இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மூலம் நட்சத்திரம் தனுசு ராசிக்கு உரியதாகும். மூலம் நட்சத்திரம் வாயு புத்திரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள்.ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும்.

மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆபத்தா?

மூல நட்சத்திர பெண் சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக இருப்பதால், அவள் திருமணம் செய்து, வாழ்க்கை நடத்த புகுந்த வீடு செல்லும் பொழுது அங்கு தனது புத்தி சாலி தனமான நடவடிக்கையால் எல்லோரையும் கவர்ந்து விடும் தன்மை கொண்டவராக இருப்பார்கள்.மேலும், நிர்வாக திறமை அதிகமாகவும் இருப்பார்கள். இதனால் இதுவரை குடும்ப நிர்வாகத்தை கவனித்து வந்த தனது கணவர் மற்றும் மாமனாருக்கு, தனது நல்ல ஆலோசனை சொல்வார்கள்.

அப்பொழுது கணவன் ஏற்றுகொள்ளும் தன்மையுடன் இருப்பார். ஆனால் மாமனார் ஏற்றுக் கொள்ள மறுப்பார். இதற்கு காரணம் நேற்று வந்தவள் எனக்கு ஆலோசனை சொல்வதா என்று நினைப்பார்.இதனால் மாமனாருக்கும், மருமகளுக்கும் அதிகமாக சண்டை சச்சரவுகள் ஏற்படுவதால், ஜோதிடம்  மூலம் நட்சத்திரம் உள்ள பெண்களால் மாமனார் இறந்து விடுவார் என்று கூறுகின்றனர்.எனவே, மூலம் நட்சத்திரம் உள்ள பெண்களால் மாமனாருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்பதே உண்மையாகும் .

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]