மூன்றே மாதத்தில் ஆஸ்துமாவை விரட்ட இதை மட்டும் செய்யுங்கள்!

பலருக்கும் இன்று ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. இவர்கள் இருமல், இரைப்பு, மூச்சுத்திணறல், மூச்சடைப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.  இதற்கான நிரந்தரத் தீர்வாக சுவாசகோச எனும் முத்திரை உள்ளது.

சுவாசகோச முத்திரை செய்வது எப்படி?

  1. சுண்டு விரலால் கட்டை விரலின் அடி ரேகையையும், மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையையும் தொட வேண்டும்.
  2. அதன் பின் நடுவிரலின் நுனியால் கட்டை விரலின் நுனியை தொட்டு ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்ட வேண்டும்.
  3. இந்த முத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க, ஆள்காட்டி விரலை 90 டிகிரி மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். ஆனால் கையை கவிழ்த்து அல்லது கீழ்நோக்கி வைக்கக் கூடாது.
  4. இந்த முத்திரையை விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ, கால்களை தரையில் ஊன்றியோ மற்றும் படுத்த நிலையிலோ செய்யலாம்.
  5. ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 முறைகள் செய்யலாம். இரைப்பு, இருமல் உள்ளவர்கள் அவைகள் குறையும் வரை செய்து கொண்டே இருக்கலாம்.
  6. தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இந்த முத்திரையை செய்யலாம்.

பலன்கள்

  • ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதங்களில் ஆஸ்துமா நோயின் தீவிரம் குறையும்.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இருமல் பிரச்சனையை கட்டுக்குள் வைக்கும்.
  • தினமும் இவ்வாறு செய்வதின் மூலம் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்பட்டு மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் அடைப்பு ஆகியவை குறையும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]