மூன்று மாத குழந்தைக்கு எமனான தந்தை- தரையில் அடித்து கொடுமைப்படுத்திய தந்தை பொலிஸார் கைது.

இலங்கையின் நொச்சியாகம பகுதியில் குடும்பத் தகராறில் மூன்று மாத சிசுவை தரையில் அடித்த தந்தையொருவரை பிரதேசவாசிகள் இணைந்து மரமொன்றில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நொச்சியாகம – கடுபத்வெவ – கபரகொயா வெவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சந்தேகநபரான கணவர் மனைவியை தடியொன்றால் தாக்கியுள்ள நிலையில் , இதன்போது மனைவியின் கையில் இருந்த குழந்தையும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் , குழந்தையை குறித்த சந்தேகநபர் தரையில் அடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த குழந்தை நொச்சியாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைக்கு நேற்றைய தினம் (18-03-2019) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிவில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் (19-03-2019) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]