மூன்று பெண்களை கண்கலங்க வைத்த ஆர்யா- அதிர்ச்சி வீடியோ உள்ளே!!

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இன்று ஒளிபரப்பப்பட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆர்வமாக இருந்தனர்.மூன்று பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போட்டி போட்டுவரும் நிலையில் ஆர்யா கடைசியில் ஒரு ஸ்பெஷல் டோக்கன் ஆப் லவ் யாருக்கு அணிவிப்பார் என இறுதிவரை பரபரப்பாகவே இருந்தது.

பைனலுக்கு வந்திருந்தவர்கள் பலரும் ஆர்யா அகாதாவை திருமணம் செய்துகொள்வார் என கணித்தனர். ஆனால் ஆர்யா அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு முடிவை அறிவித்தார்.

“என்னோட வாழ்க்கையை முடிவு செய்ய அறிவிக்கப்பட்ட இந்த ஷோவில், இவ்ளோ எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆனதுல இருந்து என்னால டிசைட் பண்ண முடியலை. எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுது. அதுபோக, இந்த ஷோவுக்கு வந்த எல்லாருமே என்னைப் பிடிச்சு வந்தாங்க.

என்னோட மனம் விட்டு பேசினாங்க. நானும் அவங்ககிட்ட உண்மையாகவே நடந்துக்கிட்டேன். ஸோ, அவங்க யாரையுமே நான் ஹர்ட் பண்ண விரும்பலை. அதனால, என்னோட மேரேஜ் பத்திக் கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே அறிவிப்பேன்!” என ஆர்யா கூறியுள்ளார்.

வீடியோவை காண…..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]