மூன்று பிள்ளைகளும் தாயும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி- வவுனியா சம்பவம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் 3 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன் காலை வேலைக்கு சென்ற நிலையில் மனைவி தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சு மருந்தினை சோடாவுடன் கலந்து வழங்கியதுடன், தானும் அதனை அருந்தியுள்ளார். இதன்போது இரண்டாவது மகனான 6 வயது சிறுவன் தனது அம்மம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மா சொடாவுடன் ஏதோ கலந்து தந்துவிட்டார் எனத்தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற உறவினர்கள் அவர்கள் நால்வரையும் மீட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிகம சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, 40 வயதான தாய் மற்றும்12 வயது, 6 வயது, 1 1/2 வயது பிள்ளைகள் மூவரும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனினும் 1.1/2 வயது குழந்தை ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]