மூன்று பிள்ளைகளின் தாய் படுகொலை

மனைவியை கத்தியால் வெட்டி கணவன் கொலை செய்த சம்பவம் திவுலகல, ஹலாதிவல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

33 வயதுடை மூன்று பிளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டள்ளார்.

கடந்த 23ஆம் திகதியன்று 7 வயதுடைய தனது மூத்த பிள்ளையை பாடசாலையிலிருந்து அழைத்து வந்த போது கணவர் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வீட்டிலிருந்து கத்தியை எடுத்து, கணவன் கடுமையாக தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் மனைவி மயங்கி விழுந்ததுடன் அவரை அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையை தொடர்ந்து கணவர் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சந்தேநபர் பொலிஸ்நிலையத்தில் நேற்று சரணடைந்தார்.

சரணடைந்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]