மூன்றாவது டெஸ்டடிலில் விளையாட ராஞ்சி சென்றது ஆஸி அணி

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், மூன்றாவது போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய அணியினர் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.
கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்ததுடன், பலரது எதிர்ப்பார்ப்புக்களையும் தூண்டிவிட்டுள்ள இந்த டெஸ்ட் போட்டி குறித்து, இரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
நடைபெறவுள்ள போட்டியில், அவுஸ்திரேலியா வெற்றி பெற்று 12 வருடங்களுக்கு பின்னர் இந்திய மண்ணில், சரித்திர வெற்றியைப் பதிவு செய்யுமா? அல்லது இம்முறையும் கிண்ணம் வெல்லாது வெறுங்கையோடு திரும்புமா? என்ற வினா இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், ராஞ்சியில் ஆரம்பிக்கும் போட்டியை இரு அணிகளும் முக்கிய போடடியாக கருதுவதுடன், வெற்றிக்காக கடும் முயற்சியை மேற்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

ராஞ்சி சென்றது ஆஸி அணி