மூன்றாவது குழந்தை பிறந்தால் விவசாய நிலம் இலவசம்! எங்கு தெரியுமா?

குழந்தை பிறப்பு வீதம் மிக குறைவாக உள்ள நாடுகளில் ஒன்று தான் இத்தாலி. சென்ற வருடம் இங்கு 4 இலட்சத்து 66 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளது.

குழந்தை பிறப்பு வீதம் குறைவாக இருப்பதற்கு காரணம் இங்குள்ள இளைஞர் யுவதிகள் திருமணம் செய்துக்கொள்ளாமலே வாழ்கின்றனர். இதனால் இவர்கள் குழந்தை பெறுவதை விரும்புவது இல்லை.

இதனால் இந்நாட்டு அரசாங்கம் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதாற்காக மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியினர்க்கு இலவச விவசாய நிலம் வழங்கவுள்ளது.

இந்த நிலத்தை இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தலாம். இந்த திட்டம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் பட்ஜெட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலி அரசுக்கு 12 இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]