மூக்கு உடைந்த பெண்ணிற்கு தையல் போட்ட பிணவறை ஊழியர்

மூக்கு உடைந்த பெண்ணிற்கு பிணவறை ஊழியர் ஒருவர் தையல் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பிணவறை ஊழியர் அளிக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் அருகே கடந்த 29ஆம் திகதி நடந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதன்போது காயமடைந்தவர்கள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர், மதுரைக்கு கொண்டுசெல்லுமாறு கூறியதை தொடர்ந்து, வலியால் துடித்தவர்களுக்கு பிணவறை ஊழியர் முதலுதவி செய்துள்ளார்.

எனவே பிணவறை ஊழியர் சிகிச்சை அளிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிற நிலையில், அன்றைய தினம் பணியிலிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே நோயாளிக்களுக்கு சிகிச்சையளித்தவர் மருத்துவமனையின் பல்நோக்கு உதவியாளர் என்றும் அவர் பிணவறை ஊழியர் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]