முஸ்லீம் பள்ளிவாசல் மீது தீ வைப்பு

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் மீது நேற்று அதிகாலை இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறிப்பிட்ட 4.00 மணி நேரத்திற்குள் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டுள்ளது

இப்பள்ளிவாசல் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருவதால் அருகில் தற்காலிகமாக தொழுகை நடத்தி வந்த பள்ளிவாசல்மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தீ வைப்பினால் வணக்கஸ்தலத்திற்கு உள்ளே இருக்கின்ற தரைவிரிப்புகள் தீயினால் கருகி உள்ளதை காணக்கூடியதாக இருந்ததுடன், ஒரு மதுபான போத்தலும் அதற்குள் எரிபொருளும் காணக்கூடியதாக இருந்துள்ளது.