முஸ்லிம் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – இரா.சம்­பந்தன்

Sampanthanதமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஒற்­று­மையை தொடர்ந்தும் பேண வேண்டும். தமிழ் மக்­களின் ஆத­ரவு கார­ண­மா­கவே எம்மை சகல தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். எனவே அந்த நிலைமை பாது­காக்­கப்­பட வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்பு விட­யத்தில் முஸ்லிம் சகோ­த­ரர்கள் எம்­முடன் இணைந்து செயற்­ப­ட­வேண்டும். இந்த இணைப்பு தொடர்பில் எமக்குள் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் ( Sampanthan ) தெரி­வித்தார்.

இணைந்த வடக்கு,கிழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்­சரை ஏற்­றுக்­கொள்­வ­தற்கும் நாம் தயா­ரா­க­வி­ருக்­கின்றோம். இடைக்­கால அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் முன்­னேற்­ற­க­ர­மாக இருக்­கின்­றன.

ஆனால் இது இறுதி முடி­வல்ல. இறு­தித்­தீர்­மானம் எடுக்­கப்­பட்ட பின்னர் அது குறித்து மக்­களை நாம் தெளி­வு­ப­டுத்­துவோம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மன்னார் நகர சபை மண்­ட­பத்தில் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மன்னார் மாவட்­டக்­கி­ளையின் ஏற்­பாட்டில் நேற்று மாலை சம­கால அர­சியல் கள நில­வரம் தொடர்­பான விழிப்­பு­ணர்வு கருத்­த­மர்வு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக்கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன்                   ( Sampanthan ) மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]