முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வுக்கு தமிழ் தேசியப் பேரவை ஆதரவளிக்கும் – சட்டத்தரணி மணிவண்ணன்

முஸ்லிம் மக்களின்

முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வுக்கு தமிழ் தேசியப் பேரவை ஆதரவளிக்கும் சட்டத்தரணி மணிவண்ணன் உறுதி.

‘முஸ்லிம் மக்களின் மீள்குமர்வுக்கு நாம் தடையாகவிருக்கமாட்டோம். அவர்களுக்கு மாநகர சபைக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சகல உதவிகளையும் வழங்குவோம். ஆனால் முஸ்லிம் மக்களின் குடியேற்றத்துக்கு அனுமதியளிக்க முடியாது’

இவ்வாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ் தேசியப் பேரவையின் யாழ்ப்பாண மாநகர சபையின் மேஜர் வேட்ப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய பேரவையின் செய்தியாளர்கள் சந்திப்பும் செய்தியாளர்களுக்கான விருந்துபசார நிகழ்வும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘யாழ்ப்பாண மாநகர சபைக்கு உள்பட்ட பகுதியில் தனியார் காணிகளே பொரும்பாலானவை உள்ளன. எனவே முஸ்லிம் மக்களின் குடியேற்றத்தை அனுமதிக்கும் அதிகாரம் உள்ளது.

தமிழ் தேசியப் பேரவை, மத இன வேறுபாடியின்றியே யாழ்ப்பாண மாநகர சபை ஆட்சியை முன்னெடுக்கும். அனைவரினது உரித்துக்களும் கவனத்திலெடுத்தே அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அபிவிருத்திகள் மேம்படுத்தப்படும்’ என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]