புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்தினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் கடந்த நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்தும் தமது மீள்குடியேற்றங்கள் விரைவாக இடம்பெறாத்தை சுட்டிக்காட்டியும் யாழ் மாவட்ட முஸ்லிம் சமூகத்தினர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்

இவ்விடயத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் விதமாக யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம்கள் தமது வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கறுப்புக்கொடிகளை கட்டி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்

அத்துடன் யாழ் மானிப்பாய் வீதி ஐந்து சந்திப்பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் யாழ் மாவட்ட முஸ்லிம்கள் இன்று முன்னெடுத்தனர்

தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 27 வருடங்கள் கடந்த நிலையில் இன்றுவரை தமது மீள்குடியேற்றத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என இவர்கள் சுட்டிக்காட்டினர் வீட்டுத்திட்டத்தில் அரச அதிகாரிகளால் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்-

இவ்விடயங்களில் அரசாங்கம் மற்றும் வடமாகாணசபையினர் உடனடியாக தலையிட்டு தமது பிரச்சனைகளை தீர்த்து வைக்கவேண்டும் என இவர்கள் வலியுறுத்தியதுடன் தொடர்ந்தும் தாமதிக்கப்படும் பட்சத்தில் சர்வதேசத்தை நோக்கி தமது போராட்டத்தை விஸ்தரிக்கப்போவதாகவும் தெரிவித்தனர்-

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை வடமாகாண எதிர் கட்சி தலைவர் சி.தவராசா நேரில் சென்று சந்தித்ததுடன் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]