முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்க கூட்டமைப்பு ஆதரவுத் தெரிவித்தும்… : மாவை

முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராகத் தெரிவுசெய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தபோதும் அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர். இந்த நல்ல சந்தர்ப்பத்தை நாம் பகிரங்கமாக அறிவித்தது வட, கிழக்கு இணைப்புக்கு ஒரு அத்திவாரமாக அமையும் என்பதற்காகவே என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழத்தேசியக்கூட்டமைப்பின் மேதினக்கூட்டம் அம்பாறை மாவட்டததில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்று.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் பேசுகையில்,

அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக குரல் கொடுக்கும் கட்சியாகவும் தமிழர்களுக்கு உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் கட்சியாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளது. 60 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த தமிழரசுக்கட்சி பல வழிகளிலும் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றது. 1949 ஆண்டு தலைவர் தந்தைசெல்வா சொன்னார், கிழக்கு மக்களின் பலம் குறைவாக இருந்தால் அவர்களுக்கு உதவியாக வடக்கு மக்களின் பலம் கொடுக்கவேண்டும் என்று.

அம்பாரை மாவட்டத்தில் பலவழிகளிலும் பாரிய பிரச்சினைகள் இருந்துகொண்டு இருக்கின்றது. தமிழர்களுக்கான அரசியல் தீர்வுபெற வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது பாடுபடுகின்றது. இத்தீர்வு வரும்போது அம்பாரைமாவட்டம் தவீர்ந்த பிரச்சினை அல்ல அம்பாரை மாவட்ட தமிழ் மக்கலும் அத்தீர்வுத்திட்டத்தில் உள்வாங்கப்படுவார்கள். இதில் எவ்வித வேறுபாடும் இல்லை. இந்த மாவட்டத்தில் பல இழப்புக்கள் மற்றும் நில ஆக்கிரமிப்புக்கள் என்பன இடம்பெற்று இருக்கின்றன. இந்த மாவட்டத்தின் பிரச்சினைகளை எமது தலைவர் மூலம் ஆட்சிஆளர்களுடனும் முஸ்லிம் சகோதரர்களுடனும் பேசித் தீர்க்கவேண்டியுள்ளது.

1961 ஆண்டு நான் மாணவனாக இருந்தகாலத்தில் தமிழரசுக் கட்சி பல இடங்களில் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை நடாத்தியது. இதில் நாம் இந்தப் பகுதிக்கு வந்தபோது எமது தமிழ்த் தாய்மார்களுடன் முஸ்லம் பெண்களும் அச் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றி இருந்தனர்.
வட, கிழக்கு இணைக்கப்படவேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் தம்பி அஸ்வின் மேடையில் பேசியிருந்தார். இந்த இலக்கை அடையவேண்டும் என்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முனைப்பாக இருந்துகொண்டு இருக்கின்றது.

அண்மையில் அம்பாரை இறக்காமம் மாயக்கல் பகுதியில் சிங்களவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது முஸ்லிம் காங்ரஷின் தலைவர் ரவூ ஹக்கீம் அவர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் அவர்களும் சென்று ஜனாதிபதியுடன் பேசி நல்ல தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அரசாங்கத்தை மாற்றி புதிய அரசாங்கத்தினைக் கொண்டுவருவதில் அவதானமாக செயற்பட்டவர்கள் தமிழர்கள். அதனால்தான் இன்று மைத்திரி பால தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றது. . வட, கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்ற நிலங்கள் யாருடையதோ அது உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அன்று தந்தை செல்வா எமக்கான உரிமையினைப் பெற்றுக் கொள்வதற்காக அகிம்சை வழியில் போராடினார். பின்னர் ஆயுதப்போராட்டம் இடம்பெற்று. இன்று ஜனநாயக வழியில் தீர்வினைப் பெறுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கச்சிதமாகச் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இதற்கான பலமாக இருப்பது தமிழ் மக்களாகிய உங்களது வாக்குப்பலமே. இந்த வாக்குப்பலத்தின் மூலம் சர்வதேசத்தின் உதவியுடனும் எமக்கான தீர்வைப் பெறுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

கடந்த போர்காலத்தில் வீழ்ச்சியடையாத கல்வி இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. எமது தமிழ்ப் பிரதேச மாணவர்கள் அனேகமானோர் கலைத்துறையினைத் தெரிவுசெய்வதனால் பாரிய வேலையில்லாப்பிரச்சினை உருவாகியுள்ளது. எமது அழிந்துபோன பொருளாதாரத்தினைக் கட்யெழுப்பவேண்டுமானால் கல்வியிலே முன்னேறவேண்டும். குறிப்பாக 65 வீதமானவர்கள் விஞ்ஞானம் ,பொறியியல்,தொழில்நுட்பத் துறைகளைத் தெரிவுசெய்யவேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]